போலி பயண ஆவணங்களை பயன்படுத்திய சீனப் பெண் கைது

சிப்பாங்:

வெளிநாட்டிற்கு செல்ல போலி பயண ஆவணங்களை பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்ட சீனா பிரஜையான பெண் ஒருவர் நேற்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய எல்லை பாதுகாப்பு- கட்டுப்பாட்டு இலாகாவினரால் கைது செய்யப்பட்டார்.

மாலை 6.30 மணியளவில் ஆவண பரிசோதனையின் போது 28 வயதான அந்த பெண் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்ததை அடுத்து அவரை கைது செய்தனர்.
அந்த பெண் இரவு 9.30 மணிக்கு ஏர் ஆசியா விமானம் மூலம் கும்மிங் செல்லவிருந்தார்.

ஆனாலும் அவர் முன்னதாக வழங்கிய மின்னியல் கடப்பிதழ் ஆவணம் போலி என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்தது என்று அந்த இலாகா அறிக்கை வெளியிட்டுள்ளது.

எனவே 1959/63 குடிநுழைவு சட்டம் பிரிவு கீழ் அந்த பெண் குற்றம் புரிந்ததாக நம்பப்படுகிறது. விமான நிலைய அமலாக்க தரப்பினரிடம் ஒப்படைப்பதற்கால தற்போது அந்த பெண் குடிநுழைவு டெப்போவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் அந்த அறிக்கையில் தகவல் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here