இலங்கையில் முடக்கப்பட்ட சமூக வலைத்தளங்கள் மீண்டும் வழக்கத்துக்கு திரும்பின

கொழும்பு, ஏப்ரல் 3:

இலங்கையில் முடக்கப்பட்ட சமூக ஊடகங்கள் உள்ளூர் நேரப்படி , இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நீக்கப்பட்டதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

இலங்கையில் அரசாங்கத்துக்கு எதிராக மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், இன்று காலை சமூக ஊடங்களுக்கும் தடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இலங்கை பாதுகாப்பு அமைச்சு விடுத்த கோரிக்கையை ஏற்று, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தொலைதொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here