கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டோரில் 663 பேர் மருத்துவமனைகளில் அனுமதி

கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டோரில் நேற்று 663 புதிதாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், 378 தொற்றுகள் வகை 1 மற்றும் 2 ஆகவும், 285 தொற்றுகள் வகை 3, 4 மற்றும் 5 ஆகவும் உள்ளன.

சிலாங்கூரில் 121 வென்டிலேட்டர்கள் பயன்பாட்டில் உள்ளன. அதைத் தொடர்ந்து சபா (96) மற்றும்  கிளந்தான் (94) உள்ளன. கிட்டத்தட்ட 34% வென்டிலேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு அறிக்கையில் சுகாதார  தலைமை இயக்குநர்  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, கோவிட்-19 தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (ஐசியுக்கள்) அவற்றின் மொத்த கொள்ளளவான 880 படுக்கைகளில் 30% இல் இருப்பதாகக் கூறினார்.

கோலாலம்பூர் (67%) மற்றும் சிலாங்கூர் (50%) ஆகிய இரண்டு மாநிலங்களில் உள்ள ICU படுக்கைகள் 50% திறனைத் தாண்டியுள்ளன. மொத்தம் 153 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்பட்டது. புத்ராஜெயா (81%) மற்றும் சிலாங்கூரில் (59%) சாதாரண கோவிட்-19 படுக்கைகளின் பயன்பாடு 50% திறனைத் தாண்டியுள்ளது.

பொது மருத்துவமனைகளின் மொத்தத் திறனைப் பொறுத்தவரை (கோவிட்-19 மற்றும் கோவிட்-19 அல்லாத நோயாளிகள்), ஆபத்தான படுக்கைகள் 50% ஆகவும், 57% ஐசியூக்கள் பயன்பாட்டில் உள்ளன.

நேற்று இரண்டு கிளஸ்டர்கள் (கொத்துகள்) பதிவாகியுள்ளன. மலேசியாவின் கோவிட்-19 தொற்று விகிதம் (R-nought அல்லது R0) 0.85 ஆக இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here