வெளிநாட்டு வாகனங்களுக்கு மானிய விலையில் (RON95) பெட்ரோல் விற்பனை செய்வதற்கு தடை- KPDNHEP

கோலாலம்பூர், ஏப்ரல் 3 :

வெளிநாட்டு வாகனங்களுக்கு மானிய விலையில் பெட்ரோல் (RON95) விற்பனை செய்வதற்கு உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகம் (KPDNHEP) தடை விதித்துள்ளது.

சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட வாகனத்திற்கு RON95 பெட்ரோலை நிரப்பும் ஒரு நபரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நான்டா லிங்கி இதுபற்றிக் கூறுகையில், அந்தப் புகைப்படத்தைப் பற்றிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் மற்றும் அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

வெளிநாட்டு வாகனங்களுக்கு RON95 எரிபொருளை விற்பனை செய்வதை அனுமதிக்காதபடி, ஜோகூரில் உள்ள அனைத்து பெட்ரோல் நிறுவனங்கள் மற்றும் பெட்ரோல் நிலைய நடத்துநர்களுக்கு அவர் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

“Ops Pantau 2022 நடவடிக்கையுடன் மேலும் தீவிரமான அமலாக்க நடவடிக்கைகளும் செயல்படுத்தப்படும்.

“ஏப்ரல் 1 முதல் பொருளாதாரத் துறை மற்றும் நாட்டின் எல்லைகள் முழுமையாக மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து வர்த்தகர்களின் அதிக இணக்கத்தை உறுதிசெய்யும் வகையில், Ops Pantau 2022 ஆனது போதுமான பொருட்களை வழங்குவதையும் நியாயமான விலையில் விற்கப்படுவதையும் உறுதி செய்ய ஆரம்பிக்கப்பட்டது.

சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தின் எல்லையில் உள்ள தனது அரசு நிறுவனங்களுக்கு கண்காணிப்பு மற்றும் ஆய்வை தீவிரப்படுத்த அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அலெக்சாண்டர் கூறுகையில், விநியோகக் கட்டுப்பாடு சட்டம் 1961 ஐ மீறும் நபர்கள், அதிகபட்சமாக RM1 மில்லியன் அபராதம், அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here