விரைவு பேருந்து – வேன் மோதல்; 4 பேர் பலி

கோலா தெரங்கானு,  கோலா நெரஸில் உள்ள கம்போங் சுங்கை இகான் என்ற இடத்தில் விரைவுப் பேருந்து மீது வேன் நேற்று மாலை மோதியதில் நான்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் உயிரிழந்தனர்.

மாலை 6.20 மணியளவில் Setiu வில் இருந்து Kuala Terengganu நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் காரை முந்திச் சென்று எதிரே வந்த விரைவுப் பேருந்தின் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டதாக Kuala Nerus தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் Azmi Omar தெரிவித்தார்.

பலியானவர்கள் சையத் முகமது ஷுக்ரி துவான் யாஹ்யா 36, முஹம்மது சௌபி ஜூசோ 34, மற்றும் முகமது ஷாலான் 37 என அடையாளம் காணப்பட்டனர். வேன் ஓட்டுனர் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை.

காரின் ஓட்டுநரும் மற்றொரு காரில் இருந்த பயணியும் காயமடைந்ததாகவும் தெமர்லோ, பகாங் இருந்து ஜெர்திஹ் நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவுப் பேருந்தின் 13 பயணிகளும் ஓட்டுநரும் காயமடையவில்லை என்றும் அஸ்மி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here