கோலப்பிலா, ஏப்ரல் 29 :
தவறான அறிக்கையை அளித்ததற்காக, இல்லத்தரசி ஒருவருக்கு, இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம், RM1,800 அபராதம் விதித்தது.
குற்றம் சாட்டப்பட்ட வி. ஜானகி, 50, மாவட்ட நீதிமன்ற நீதிபதி சைபுல் சயுதி முன்னிலையில் மொழிபெயர்ப்பாளர் மூலம், தமிழ்மொழியில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டவுடன், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர் இங்குள்ள கோலப்பிலா காவல் நிலையத்தில் ஏப்ரல் 11 ஆம் தேதி
தன்னிடம் வழிப்பறி நடந்ததாகக் கூறி தவறான வாக்குமூலம் அளித்தார்.
பின்னர் அவர் மீது குற்றவியல் சட்டத்தின் 182வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது RM2,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
குற்றச்சாட்டை விசாரணை செய்த நீதவான் 1,800 வெள்ளி அபராதமும், அபராதத்தை செலுத்தத் தவறினால் 6 மாத சிறைத் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் எந்தவொரு வழக்கறிஞரும் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.









