“ஓப் பாகார் லாவூட்” நடவடிக்கையில் 32 பேர் கைது; RM10.6 மில்லியன் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

புத்ராஜெயா, ஏப்ரல் 30 :

கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கிய “ஓப் பாகார் லாவூட் (Op Pagar Laut) ” நடவடிக்கையில் மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (MMEA) 32 பேரைக் கைது செய்துள்ளதுடன், சுமார் RM10.6 மில்லியன் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது.

MMEA டைரக்டர் ஜெனரல் கடல்சார் அட்மிரல் டத்தோ முகமட் ஜூபில் மாட் சோம் இதுபற்றிக் கூறுகையில், மலேசியக் கடற்பரப்பில் பல இடங்களில் ஏழு வியட்நாமிய மீன்பிடி படகுகள் சிறைபிடிக்கப்பட்டதே இதுவரை கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றார்.

புதன்கிழமை இரண்டு படகுகள் தடுத்து வைக்கப்பட்டன, நேற்று ஒரு படகு திரெங்கானு கடற்பரப்பில், தலா இரண்டு படகுகள் ஜோகூரில் உள்ள கிளாந்தான் மற்றும் மெர்சிங் கடற்பகுதியில் ஏப்ரல் 22 அன்று தடுத்து வைக்கப்பட்டன, என்றார்.

மீன்பிடிச் சட்டம் 1985 மற்றும் குடிவரவுச் சட்டம் 1959/63 ஆகியவற்றின் கீழ் மொத்தம் 66 வியட்நாமியர்கள் கைது செய்யப்பட்டதாகவும், RM10.5 மில்லியன் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here