கோல கூராவ் கடல் பகுதியில் கரையொதிங்கிய படகிலிருந்த 143 மியன்மார் அகதிகள் கைது

பாரிட் பந்தார், ஏப்ரல் 30 :

இன்று காலை, கோல கூராவ் கடல் பகுதியில் உள்ள மணல் திட்டுகளில் படகு ஒன்று கரை ஒதுங்கியதை அடுத்து, மொத்தம் 143 மியன்மார் நாட்டு சட்டவிரோத குடியேறிகளை மலேசிய கடல்சார் போலீஸ் படை கைது செய்தது.

காலை 7 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை அவர்கள் தடுத்து வைக்கப்பட்டதாக பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ மியோர் ஃபரிடலாத்ராஷ் வாஹிட் கூறினார்.

அவர் தெரிவித்தபடி, மொத்தம் 86 சட்டவிரோத குடியேற்றவாசிகள் படகில் இருந்தபோது கைது செய்யப்பட்டனர், மீதமுள்ளவர்கள் படகில் இருந்து குதித்து கரைக்கு நீந்தி தப்பிக்க முயன்றபோது கைது செய்யப்பட்டனர் என்றார்.

“அவர்கள் அனைவரும் மியான்மரில் இருந்து வந்தவர்கள் என்றும் ஐந்து முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் நம்பப்படுகிறது.

“முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், அவர்கள் கெரியானில் தரையிறங்கத் திட்டமிடவில்லை, உண்மையில் இந்த வழக்குக்கும் பினாங்கில் குடியேற்ற முகாம்களிலிருந்து இருந்து தப்பிச் சென்ற குடியேற்றக் கைதிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

“கைது செய்யப்பட்ட அனைவரும் தற்காலிகமாக கெரியான் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் (IPD) வைக்கப்படுவார்கள்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், 30 வயதுடைய ஒஸ்மான் என அழைக்கப்படும் அகதி ஒருவர், தங்களை மலேசியாவிற்கு அழைத்து வர ஒரு முகவரிடம் ஒரு தொகையை செலுத்தியதாக தெரிவித்தார். அவர்கள் அப்படகில் ஏறக்குறைய ஒரு மாத காலம் இருந்திருக்கின்றனர் என்று விசாரணையில் தெரியவந்ததாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here