மலேசியா, சிங்கப்பூர் போலீசாரின் கூட்டு நடவடிக்கையில், காதல் மோசடிகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் 2 கும்பல்கள் கைது!

கோலாலம்பூர், மே 1 :

மலே­சியா, சிங்­கப்­பூர் ஆகிய இரு­நாடுகளின் காவல்­து­றை­யி­ன­ர் இணைந்து மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், காதல் மோச­டிச் செயல்­களை மேற்­கொண்டதாக நம்பப்படும் இரண்டு கும்­பல்­க­ளை கைது செய்துள்ளனர்.

இது, இரு­நாட்­டுக் காவல்­து­றை­யி­ன­ரும் இவ்­வாண்டு இணைந்து வெற்­றி­க­ர­மாக மேற்­கொண்­டுள்ள முதல் முறி­ய­டிப்பு நட­வ­டிக்கையாகும்.

இணை­யம்­வழி மேற்­கொள்­ளப்­பட்ட காதல் மோச­டிச் செயல்­களால் தாங்­கள் ஏமாற்றப்­பட்­ட­தாக இரு பெண்­கள் புகார் கொடுத்­த­தைத் தொடர்ந்து, இந்­நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக சிங்­கப்­பூர் காவல்துறை நேற்று வெளி­யிட்ட ஒரு அறிக்­கை­யில் தெரி­வித்தது.

46 வயதுடைய அவ்விரு பெண்களும் இக்காதல் மோசடியில் சிக்கியுள்ளதாகவும், அவர்­களில் ஒரு­வர் 15,000 வெள்­ளியை இழந்­தார். மற்­றொரு­வர் 20,000 வெள்­ளியையும் இழந்துள்ளனர்.

ஏமாற்­றுக்­கா­ரர்­க­ளைப் பிடிக்க சிங்­கப்­பூர் காவல்­து­றை­யின் வர்த்­த­கக் குற்ற விசா­ர­ணைப் பிரிவு, மலே­சி­யா­வின் வர்த்­த­கக் குற்ற விசா­ர­ணைப் பிரி­வு­டன் இணைந்து செயல்­பட்­டது. காதல் மோச­டிச் செயல்­களை மேற்­கொண்ட ஏமாற்­றுக்­கா­ரர்­கள் குழு மலே­சி­யா­வில் இயங்கி­யது தெரி­ய­வந்தது.

சென்ற மாதம் 22, 23ஆம் தேதி­களில் சிலாங்­கூர், கோலா­லம்­பூர் ஆகிய பகு­தி­களில் இருக்­கும் இரண்டு அடுக்­கு­மாடி வீடு­களில் அதி­கா­ரி­கள் சோதனை நடத்­தி­னர். சோதனையில் ஆப்­பி­ரிக்­கா­வைச் சேர்ந்த ஆறு ஆட­வர்­கள் கைது­செய்­யப்­பட்­ட­னர்.

கைதானோர் 28லிருந்து 40 வய­துக்கு உள்­பட்­ட­வர்­கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here