மாராங், மே 10 :
இன்று காலை (cross-country training) பயிற்சியின் போது படிவம் 4 மாணவர் உயிரிழந்த சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாராங் மாவட்ட காவல்துறைத் தலைவர் டிஎஸ்பி முகமட் ஜைன் மாட் டெரிஸ் கூறுகையில், 16 வயதான அமான் பஸ்ரி முகமட் ரோஹைசி என்ற மாணவரே காலை 8.30 மணியளவில் பயிற்சியின் போது மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
அவரது பள்ளி தோழர்கள் சிலர் பாதிக்கப்பட்டவரை இயல்பு நிலைக்கு கொண்டுவர முயன்றனர், ஆனால் அவரது உடல்நிலை பலவீனமடைந்தது. உடனே பணியில் இருந்த ஆசிரியர் அவரை சிகிச்சைக்காக பெங்கலான் பெரங்கான் கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றார், அங்கு ஒரு மருத்துவர் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தார் என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இறந்த மாணவரின் வலது புருவத்தின் மேல் பகுதியில் சில வெட்டுக்கள், இடது கன்னத்தின் கீழ் மற்றும் இடது கையின் பின்புறம் கீறல்கள் காணப்பட்டதாகவும் இக்காயங்கள் அவர் விழுந்தபோது ஏற்பட்டதாகவும் நம்பப்படுகிறது.
இறந்த மாணவரின் உடல் பரிசோதனை முடிவுகள் எந்த தவறான குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்றத்தைக் காட்டவில்லை என்றும், இந்த வழக்கை திடீர் மரணம் என போலீசார் வகைப்படுத்தியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.









