பெட்டாலிங் ஜெயா, மே 14 :
நேற்று சுங்கை பூலோவில் நடந்த சோதனையில், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணையை உணவகங்களிலிருந்து வாங்கி, அதனை மீள் சுழற்சிக்கு உட்படுத்தி மறு சந்தைப்படுத்தி வந்த ஒருவர், உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அவர் வைத்திருந்த விற்பனை அனுமதிச்சீட்டின் நிபந்தனைகளை மீறியமைக்காக , 34 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டு, மலேசிய பாமாயில் போர்டு (எம்பிஓபி) சட்டம் 1998 இன் விதிமுறை 5 (1) இன் கீழ் விசாரணை நடத்தப்பட்டதாக உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறையின் (JKDNKA) இயக்குநர் டத்தோஸ்ரீ ஹசானி கசாலி தெரிவித்தார்.
கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள உணவகம் மற்றும் உணவக நடத்துநர்களிடமிருந்து வாங்கப்பட்ட “300 டன் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் சோதனையின் போது கைப்பற்றப்பட்டதாகவும் அதன் மொத்த மதிப்பு RM1.5 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது “என்று அவர் நேற்று இரவு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.