31,661 HFMD வழக்குகள், கடந்த ஆண்டை விட 15 மடங்கு அதிகம்

மலேசியாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 31,661 கை, கால் மற்றும் வாய் புண் நோய் (HFMD) வழக்குகள் பதிவாகியுள்ளன என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டான்ஸ்ரீ நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் வழக்குகளின் எண்ணிக்கையை விட 15 மடங்கு அதிகமாகும் என்றார்.

கடந்த வாரம், HFMD வழக்குகளில் முந்தைய வாரத்தில் இருந்து 349% அதிகரிப்பு இருந்தது. இது 1,676 வழக்குகளில் இருந்து 7,526 வழக்குகளாக உயர்ந்துள்ளது. பெரும்பாலான வழக்குகள் சிலாங்கூரில் 28%, கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் 14%, சபா (8%), பேராக் (8%) மற்றும் கிளந்தான் (7.9%).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here