மலேசிய கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்த பிரான்ஸ் கேப்டன் கைது

மேர்சிங், மே 28 :

சுங்கை மேர்சிங் கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டு பாய்மரப் படகின் கேப்டனை மலேசிய கடல்சார் அமலாக்க துறையினர் கைது செய்துள்ளனர்.

சுங்கை மேர்சிங் முகத்துவாரத்திற்கு கிழக்கே 1.6 கடல் மைல் (2.96 கிமீ) தொலைவில், கடந்த வியாழன் நண்பகல் 12.45 மணியளவில் அந்தப் பாய்மரப் படகு தடுத்து வைக்கப்பட்டதாக, மேர்சிங் MMEA இயக்குநர் கமாண்டர் கைருல் நிஜாம் மிஸ்ரான் தெரிவித்தார்.

44 வயதான பிரான்ஸ் நாட்டவர் நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காகவும், மலேசியாவுக்குள் நுழைவதற்கான அனுமதியுடன் செல்லுபடியாகும் பயண ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறியதற்காகவும் அவர் கூறினார.

மேலும், அந்த கேப்டன் Ops Jaksa நடவடிக்கையின்போது தடுத்து வைக்கப்பட்டதாக கைருல் நிசாம் வெளியிட்டஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here