விரைவில் பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசையில் அரசு ஊழியர் RM21,550 இழந்தார்

தெலுக் இந்தான், மே 29 :

தான் விரைவில் பணக்காரர் ஆக வேண்டும் என்று விரும்பியதால், ஒரு அரசு ஊழியர் கடந்த வியாழன் அன்று தனது RM21,550 சேமிப்பை ஒரு அந்நிய செலாவணி முதலீட்டு மோசடி கும்பலிடம் இழந்தார்.

ஹிலீர் பேராக் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அஹ்மட் அட்னான் பஸ்ரி கூறுகையில், 37 வயதான அந்த நபர் பேஸ்புக்கில் லாபகரமான வருமானம் தரும் முதலீட்டு விளம்பரத்தைப் பார்த்து, தான் அதில் ஈடுபட ஆர்வமாக இருப்பதாகக் கூறினார்.

அவரது கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர் டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் பயன்பாடுகள் மூலம் ஒரு நபருடன் தொடர்பு கொண்டார்.

அந்த மோசடிக் கும்பலிடம் இருந்த தெரிவுகளில், பாதிக்கப்பட்டவர் ‘தங்கம்’ தொகுப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார், இது அந்த நபரால் வழங்கப்பட்ட மூலதனத்தின் மூலம் உறுப்பினரான பிறகு, ஆறு மணி நேரத்திற்குள் 120 சதவீத லாபத்தை பெறலாம் என உறுதியளிக்கிறது.

“அது தவிர, இந்த தொகுப்பு ஷரியாவுக்கு இணங்குவதாகவும் கூறப்படுகிறது, மேலும் மோசடி கும்பல் வாக்குறுதியளித்த சலுகையால் பாதிக்கப்பட்டவரை அதன்பால் ஈர்க்கவும் நம்பிக்கையும் ஏற்படுத்தியது” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, இந்த வாய்ப்பை ஒப்புக்கொண்ட பாதிக்கப்பட்டவர், அந்த நபரின் வங்கிக் கணக்கிலிருந்து CIMB வங்கிக் கணக்கிற்குப் பணத்தை மாற்றுவதன் மூலம் RM21,550 மதிப்பிலான மூன்று பரிவர்த்தனைகளைச் செய்தார்.

“முதல் பரிவர்த்தனை உறுப்பினர் கட்டணம் மற்றும் முதலீட்டு மூலதனமாக RM3,000 மும், இரண்டாவது பரிவர்த்தனை வங்கியை செயல்படுத்தும் நோக்கத்திற்காக RM5,800 யையும் மாற்றினார்.

“மேலும் மலேசிய ரிங்கிட்டை அமெரிக்க டாலருக்கு மாற்றும் நோக்கத்திற்காக RM12,550 பணப் பரிவர்த்தனை செய்தார்” என்று அவர் கூறினார்.

வாக்குறுதியளிக்கப்பட்ட ஈவுத்தொகை கிடைக்காதபோது, தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்ததாகவும், அதன் பின்னர் அந்தக் கும்பல் அவரது அழைப்புக்கு கூட பதிலளிக்கவில்லை என்றும், அதன் பின் அவரது தொலைபேசி எண்ணும் தடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“பாதிக்கப்பட்ட அரசு ஊழியர், மேல் நடவடிக்கைக்காக நேற்று போலீசில் புகார் செய்தார். இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 420ன் படி விசாரிக்கப்படும்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here