அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காக ஃபெல்டா நிலத் திட்ட மேற்பார்வையாளருக்கு 14 நாட்கள் சிறை, RM25,000 அபராதம்

சிரம்பான், ஜூன் 1 :

நிறுவன குத்தகை அமைப்பு செயலாளராக இருந்த தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, 2018 ஆம் ஆண்டு அந்த சேவைப் பணிகளைப் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டில், குற்றத்தை ஒப்புக்கொண்ட ஃபெல்டா நிலத் திட்ட மேற்பார்வையாளருக்கு, இன்று சிரம்பான் அமர்வு நீதிமன்றத்தில் 14 நாட்கள் சிறைத்தண்டனையும் RM25,000 அபராதமும் விதித்தது.

நீதிபதி ருஷான் லுட்பி முகமட், குற்றஞ்சாட்டப்பட்ட முகமட் சாஃபீக் மொக்தாருக்கு இந்த தண்டனை விதித்தார். நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர், 34 வயதான சயாஃபீக்
தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

மேலும், அபராதத்தைச் செலுத்தத் தவறினால், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஐந்து மாதங்கள் சிறைத்தண்டனையும், மே 24 அன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் அவர் கைது செய்யப்பட்ட தேதியிலிருந்து 14 நாட்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

குற்றச்சாட்டின்படி, ஃபெல்டா பாலோங் 5 அலுவலகத்தில் திட்ட ஒப்பந்தக் குழுவின் செயலாளராக இருந்த குற்றம் சாட்டப்பட்டவர், லஞ்சம் பெற தனது பதவியைப் பயன்படுத்தினார் என கூறப்பட்டிருந்தது.

மேலும் ஃபெல்டா பாலோங் கிராமத்தின் சாலையில் அலங்காரப் பூ மரங்களை நடுவதற்கும், அழகுபடுத்துவதற்கும் உழைப்பு, உபகரணங்கள், போக்குவரத்து ஆகியவற்றை உள்ளடக்கிய, RM4,990 மதிப்புள்ள வேலைத்திட்டத்தை வழங்குவதற்கு தனது நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

நவம்பர் 2018 இல் கேமாஸ், ஃபெல்டா பாலோங் 5 அலுவலகத்தில் இந்தக் குற்றம் செய்யப்பட்டது.

அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவர் மீது மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையச் சட்டம் 2009 பிரிவு 23 (1) இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது மற்றும் இக்குற்றம் அதே சட்டத்தின் பிரிவு 24 (1) இன் கீழ் தண்டிக்கப்படலாம்.

எந்தவொரு வழக்கறிஞராலும் பிரதிநிதித்துவப்படுத்தப்படாத குற்றஞ்சாட்டப்பட்டவர், மேன்முறையீட்டில் தனது செயலுக்கு வருந்துவதாகவும் மற்றும் தனக்கு குறைவான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டார்.

மேலும் தான் தனது மனைவி மற்றும் 11 மாதங்கள் முதல் 6 வயது வரையிலான மூன்று குழந்தைகளை பராமரிப்பதாகவும் இன்னும் படிக்கும் ஒரு இளைய சகோதரனின் கல்விக்கு தானே பணம் செலுத்துவதாகவும் கூறினார்.

இவ்வழக்கு துணை அரசு வழக்கறிஞர் முகமட் அஸ்ரிப் பிர்தௌஸ் முகமட் அலியால் தொடரப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here