நாளை நடைபெறும் 2023 ஆசிய கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியை முன்னிட்டு LRT சேவை நீட்டிப்பு

கோலாலம்பூர், ஜூன் 10 :

அம்பாங்/ஸ்ரீ பெட்டாலிங் வழித்தடத்திற்கான இலகு ரயில் சேவை (LRT) நாளை புக்கிட் ஜலீல் நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கும், மலேசியா மற்றும் பஹ்ரைன் இடையேயான 2023 ஆசிய கோப்பை தகுதிச் சுற்றுடன் இணைந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

Rapid Rail Sdn Bhd, இன்று வெளியிட்ட ஒரு ஊடக அறிக்கையில், செந்தூல் திமூருக்குச் செல்லும் கடைசி ரயில் நள்ளிரவு 12.03 மணிக்குப் புறப்படும் என்றும், புத்ரா ஹைட்ஸ்க்கான ரயில் நள்ளிரவு 12.44 மணிக்குப் புறப்படும் என்றும் அறிவித்தது.

போட்டி முடிந்ததும் பயணிகளுக்காக கூடுதல் ரயில்கள் வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here