வெளிநாட்டுத் தொழிலாளி ஒருவரை 30 நாட்களுக்குள் வேலைக்கு அமர்த்தத் தவறினால், RM30,000 அபராதம்- MEF எதிர்ப்பு

பெட்டாலிங் ஜெயா:

வெளிநாட்டு ஊழியர்களை அவர்கள் வந்த 30 நாட்களுக்குள் வேலைக்கு அமர்த்தத் தவறினால், ஒரு தொழிலாளிக்கு RM30,000 வரை அபராதம் விதிக்கும் திட்டத்திற்கு மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பு (MEF) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே நிதிச் சிக்கலில் இருக்கும் முதலாளிகளுக்கு இவ்வாறு அபராதம் விதிப்பதை விட சிறந்த வழிமுறைகள் தேவை என்று அதன் தலைவர் டத்தோ சையட் ஹுசைன் சையத் ஹுஸ்மான்,

முன்னதாக, வெளிநாட்டுத் தொழிலாளி ஒருவரை 30 நாட்களுக்குள் வேலைக்கு அமர்த்தத் தவறினால், அவரைத் தருவித்த சட்டபூர்வ முதலாளிக்கு RM30,000 அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் பொருட்கள் அமைச்சர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கானியின் முன்மொழிவு குறித்து அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

மேலும் “உணர்வுகள் அல்லது உணர்ச்சிகளின் அடிப்படையில் நாம் தண்டனைகளை விதிக்க முடியாது. உண்மையான தரவு இல்லாமல் அனுமானங்களை வைத்து பிரச்சினைக்குரிய தீர்வை முடிவு செய்வது தவறானது, ”என்று சையட் ஹுசைன் கூறினார்.

“வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு விண்ணப்பித்த பெரும்பாலான முதலாளிகள் அவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளனர்,” என்று அவர் கூறினார். அத்தோடு சட்டப்பூர்வ வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்துவதற்கு ஒரு தலைக்கு RM20,000 முதல் RM25,000 வரை செலவாகும் என்று சையட் ஹுசைன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here