நெகிரி செம்பிலானில் நான்கு நாடாளுமன்றத் தொகுதி மற்றும் 20 சட்ட மன்றத் தொகுதிகளில் போட்டியிட வாரிசான் திட்டம்

சிரம்பான், ஜூன் 17 :

நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலில் (GE15) நெகிரி செம்பிலானிலுள்ள நான்கு நாடாளுமன்றத் தொகுதி மற்றும் 20 சட்ட மன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதை வாரிசான் கட்சி இலக்காகக் கொண்டுள்ளதாக அதன் மாநிலத் தலைவர் டத்தோ அஸ்மான் இட்ரிஸ் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இது கட்சியின் உயர்மட்ட சபையின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்று அவர் கூறினார்.

“வாரிசான் கட்சி ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த மாநிலத்தில் இயங்கி வருகிறது மற்றும் பொதுமக்களிடமிருந்து உற்சாகமான வரவேற்பை அது பெற்றுள்ளது என்றும் நெகிரி செம்பிலானில் வாரிசானுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.

“ மாநிலத்தில் உள்ள அனைத்து இனத்தினருக்கும் ஒருமித்த கட்சியாக வாரிசான் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என நெகிரி செம்பிலான் வாரிசான் கட்சிக் கூட்டத்தை இன்று இங்கு ஆரம்பித்து வைத்த பின்னர், ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, வாரிசான் இப்போது சுமார் 25 கிளைகளில் மற்றும் சுமார் 2,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

வாரிசான் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஷாஃபி அப்டல், எதிர்வரும் ஜூன் 19 ஆம் தேதி மாநில வாரிசான் தொடர்பு அலுவலகத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைப்பார் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here