ஆப்கானிஸ்தான் காபூலில் உள்ள சீக்கியர் கோவிலில் குண்டுவெடிப்பு

காபூல், ஜூன் 18:

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சீக்கிய வழிபாட்டுத் தலமான குருத்வாரா கார்டே பர்வான் இருக்கும் பகுதியில், இன்று காலை திடீரென பயங்கர வெடிகுண்டு சத்தம் கேட்டது. அங்கு பயங்கரவாதிகளால் மலேசிய நேரப்படி, இன்று காலை 11.00 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.

சம்பவ இடத்தில் இருந்த உள்ளூர் அதிகாரி ஒருவரான கோர்னம் சிங், சர்வதேச ஊடகம் ஒன்றிக்கு கருத்து தெரிவிக்கையில், குண்டுவெடிப்பு நடந்த போது கோயிலுக்குள் 30 பேர் வரை இருந்துள்ளனர்.

அவர்களில் எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள் அல்லது எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது,” என்று தெரிவித்துள்ளார்.

“தலிபான்கள் எங்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை, என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை,” என்று சிங் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், சீக்கிய வழிபாட்டுத் தலமான குருத்வாரா கார்டே பர்வானின் பாதுகாவலர் அஹ்மத் என்பவர் இன்று காலை நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கிடைத்த தகவலின்படி, 3 பேர் குருத்வாராவில் இருந்து வெளியே வந்துள்ளனர். அவர்களில் 2 பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இன்னும் 7-8 பேர் உள்ளே சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஆனால் எண்ணிக்கை உறுதி செய்யப்படவில்லை. துப்பாக்கிச் சூடு இன்னும் தொடர்கிறது என்று இந்தியாவின் பா.ஜ.க தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா தெரிவித்தார்.

இதுகுறித்து புதுடெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், ” காபூலில் உள்ள புனித குருத்வாரா மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து வெளியாகும் செய்திகள் அறிந்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். நாங்கள் காபூலின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மேலும், வெளிவரும் முன்னேற்றங்கள் குறித்து கூடுதல் விவரங்களுக்காக காத்திருக்கிறோம் ” என்று தெரிவித்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதியை பாதுகாப்பு படையினர் முழுவதும் சுற்றி வளைத்துள்ளனர். இருப்பினும், இந்த சம்பவம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த கட்டிடம் தலைநகரில் உள்ள கடைசி சீக்கிய கோவிலாகும், மேலும் 1970களில் 100,000 ஆக இருந்த 100,000 சீக்கியர்கள் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும் ஆப்கானிஸ்தானில் 140 சீக்கியர்கள் மட்டுமே இருப்பதாக சமீபத்தில் சமூகத் தலைவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here