21 ஆம் நூற்றாண்டில் சுதந்திரம் பெற்ற நாடுகள் பற்றி அறிவோமா

உலகின் பல நாடுகள் வேறொரு நாட்டில் இருந்து பிரிந்தோ அல்லது காலணிகளாக இருந்து,அதில் இருந்து விடுபட்டோ தனி சுதந்திர நாடுகளாக அறிவிக்கப்பட்டது. அல்லது தாங்களாகவே தனி நாடாக  அறிவித்துக்கொண்டது.

இப்படி தான் 195 நாடுகளும் உருவானது. இதில் சமீப காலத்தில் உருவான நாடுகளை இளமையான நாடுகள் என்று குறிப்பிடுவர். அப்படியான 5 இளம் நாடுகளை பற்றி தான் சொல்ல போகிறோம்.

இன்று வரை உள்ள நிலையில் மிகவும் இளம் நாடு என்று சொன்னால் அது தெற்கு சூடான்  தான். கிழக்கு ஆப்பிரிக்க நாடான இது ஜூலை 9, 2011 அன்று சூடானிடமிருந்து சுதந்திரத்தை அறிவித்தது. தெற்கு சூடான் 1899 முதல் 1956 வரை இங்கிலாந்து மாறும் எகிப்தால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. அதன் பின்னர் 1972முதல் 2005 வரை உள்நாட்டு போர்கள் நடந்து ஓய்ந்து பின்னர் தனி நாடானது.

பழங்காலத்தில், ரோமானியப் பேரரசு, பைசண்டைன் , பல்கேரியப் , செர்பியப் பேரரசு மற்றும் ஒட்டோமான் பேரரசு உள்ளிட்ட பல்வேறு பேரரசுகளால் ஆளப்பட்ட கொசோவோ குடியரசு, அண்டை நாடான செர்பியாவிடம் இருந்து பிப்ரவரி 17, 2008 அன்று, தனது சுதந்திரத்தை அறிவித்தது.

இருப்பினும், செர்பியா கொசோவோவை ஒரு இறையாண்மை  நாடாக அங்கீகரிக்கவில்லை. ஐநாவின் 97 மட்டுமே கொசோவோவை முறையாக அங்கீகரித்துள்ளன. இந்நாட்டு மக்களில் 95% அல்பேனியர்கள்.

இதுவும் சேர்பியாவில் இருந்து பிரிந்தது தான். ஜூன் 2, 2006 இல் மாண்டினீக்ரோ தனிஇராச்சியமாக மாறியது. முதலாம் உலகப் போருக்கு பின் யூகோஸ்லாவியாவின் ஒரு பகுதியாக இருந்த இது 1990 களில் செர்பியாவுடன் ஒரு கூட்டமைப்பை உருவாக்கியது. பின்னர் சுதந்திரம் பெற்றது.

செர்பியர்கள் 6 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளில் பெரும் இடம்பெயர்வுகளில் மற்ற தெற்கு ஸ்லாவிக் பழங்குடியினருடன் பால்கன் பகுதிக்கு வந்தனர். அதன் பின்னர் ஓட்டோமான் பேரரசின் பகுதியாக மாறியது. 19 ஆன் நூற்றாண்டில் செர்பிய புரட்சியால் தனி பிராந்தியமானது. இரண்டாம் உலக போருக்கு பின்னர் யூகோஸ்லாவியாவாக இருந்து பின்னர் மாண்டினீக்ரோ பிரிந்ததும் செர்பியா தனி நாடானது.

கிழக்கு திமோர் , அதிகாரப்பூர்வமாக திமோர்-லெஸ்டே ஜனநாயகக் குடியரசு என்று அழைக்கப்படும் தென்கிழக்கு ஆசிய தீவு நாடு மே 20, 2002  தனி நாடானது. 16 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகலால் காலனித்துவப்படுத்தப்பட்ட 1975 இல் காலனித்துவ விடுதலை பெற்றது.  ஆனால் ஒரே வாரத்தில் இந்தோனேசியா இப்பகுதிகளை ஆக்கிரமித்தது. வன்முறை , இறப்புகள் எல்லாம் சந்தித்து இறுதியில் சுதந்திரம் பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here