கம்போங் பொகுனோன் ஆற்றில் மூழ்கிய இருவரில், முதலாமவரின் உடல் மணலில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது

பெனாம்பாங், ஜூன் 19 :

சுங்கை கம்போங் பொகுனோனில், நேற்று பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களில் ஒருவரது சடலம், இன்று, இங்குள்ள சுங்கை மோயோக் கம்போங் பாகன்சாகன் இனோபோங்கில் கண்டெடுக்கப்பட்டது.

ஹரோல்ட் வால்டர் (17) என நம்பப்படும் அந்த இளைஞரின் சடலம், பிற்பகல் 2.45 மணியளவில், மீன்பிடி வலைகளை சரிபார்க்க ஆற்றில் இறங்கிய கிராம மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

மூங்கில் மரங்களின் மணல் மற்றும் இடிபாடுகளால் மூடப்பட்ட நிலையில், ஆற்றங்கரையில் அந்த இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.

இதனை கண்ட கிராம மக்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இதற்கிடையில், பெனாம்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணைக் கண்காணிப்பாளர் முகமட் ஹாரிஸ் இப்ராஹிம் அந்த இடத்தில் சந்தித்தபோது, ​​சடலம் கண்டெடுக்கப்பட்டதை உறுதி செய்தார்.

கண்டெடுக்கப்பட்ட சடலத்தை அடையாளம் காணும் நடவடிக்கை குடும்ப உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

“பாதிக்கப்பட்டவரின் உடல் மேல் நடவடிக்கைக்காக குயின் எலிசபெத் I மருத்துவமனைக்கு (HQEI) கொண்டு செல்லப்பட்டது,” என்று அவர் கூறினார்.

நேற்று, பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்ற இந்த சோக சம்பவத்தில், ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த ஆறு இளைஞர்களில் நால்வர் பாதுகாப்பாக கரையேறினார்கள், அதே நேரத்தில் உயிர் பிழைத்த நான்கு வாலிபர்கள் ஆற்றைக் கடந்தபோது, ​​​​பலத்த நிரோட்டத்தில் இரு வாலிபர்கள் அடித்துச் செல்லப்பட்டனர், என ஊடகங்கள் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here