சீனாவைத் தாக்கிய சூறாவளி.. வேரோடு சாய்ந்த மரங்கள்…

குவாங்டான் மாகாணத்தில் உள்ள ஃபோஷான் நகரை கடும் சூறாவளி தாக்கியது. பெய்ஜிங், தெற்கு சீன பகுதியில் கோடை மழை வெளுத்துவாங்கி வருவதால், அங்குள்ள் ஏழு மாகாணங்கள் வெள்ளத்தால் தத்தளித்து வருகின்றன.

பல இடங்களில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழையானது கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால், பல கிராமங்கள் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளன. மழை வெள்ளத்தின் போது ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்புக்குழுவினர் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தெற்கு சீனாவின் குவாங்டான் மாகாணத்தில் உள்ள ஃபோஷான் நகரை கடும் சூறாவளி தாக்கியது.

சூறாவளிக் காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்து பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது மட்டுமல்லாமல் ஏராளனமான வாகனங்கள் சேதம் அடைந்தன. இருப்பினும் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here