தீ விபத்தில் சேதமடைந்த வீட்டிற்கு பிரதமர் நிதி உதவி!

கோலாலம்பூர்:

குவாந்தான், பண்டார் இந்திரா மாகோத்தா ஜெயா (Bandar Indera Mahkota Jaya, Kuantan) பகுதியில், தீ விபத்தில், வீடு முற்றிலும் சேதமடைந்த, நோர் ரிசா எம்போங் (Nor Riza Embong) என்பவருக்கு, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், RM10,000 ரிங்கிட் நன்கொடை அளித்துள்ளார்.

பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோ அகமட் ஃபர்ஹான் ஃபௌசி (Datuk Ahmad Farhan Fauzi), இந்த உதவியை வழங்கினார்.

அதுமட்டுமின்றி, இந்த விபத்தில், எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று, அவர் தெரிவித்தார். இந்த நிதி உதவி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தின் சுமையைக் குறைக்கும் என்று, நம்புவதாகவும், அவர் கூறினார்.

மேலும், இந்தச் சம்பவத்தின்போது, விரைவாக உதவிய, தீயணைப்பு, மீட்புத் துறை, பிரதமரின் துறை, ஐ.சி.யு. (ICU), உள்ளூர் சமூகத்தினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here