கோலாலம்பூர், ஜூன் 21 :
கிள்ளான் பள்ளத்தாக்கில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்தவர் என நம்பப்படும் ஒருவரை போலீசார் கைது செய்ததுடன், அவரிடமிருந்து RM120,000 மதிப்புள்ள போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது என்று செந்தூல் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் பெஹ் எங் லாய் தெரிவித்தார்.
கடந்த ஜூன் 17ஆம் தேதி அன்று சிகாகம்புட்டிலுள்ள இரண்டு வீடுகளில் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து, 39 வயதுடைய ஒருவரை போலீசார் கைது செய்தனர், அவரிடமிருந்து சுமார் RM121,862 மதிப்புள்ள 552.58 கிராம் எரிமின் 5, 130 கிராம் கெட்டமைன், 1.5 கிலோ எம்.டி.எம்.ஏ மற்றும் 7.25 கிராம் எக்ஸ்டசி ஆகியவற்றை போலீசார் கைப்பற்றப்பட்டது, இது 31,380 போதைப்பித்தர்கள் பயன்படுத்த போதுமானது என்று அவர் இன்று (ஜூன் 21) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறினார்.
மேலும் சந்தேகநபர் போதைப்பொருள் சோதனையில் எதிர்மறையாக இருப்பதாகவும் அவர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 24) வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் “ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952ன் பிரிவு 39B-ன் கீழ் நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்,” என்றும் அவர் கூறினார்.
சந்தேக நபர் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக ஏசிபி பெஹ் தெரிவித்தார்.
இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் ஏனைய உறுப்பினர்களை கண்டறியும் பொருட்டு, காவல்துறை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதாக அவர் கூறினார்.