மலாயாப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவை ஏற்பாட்டில் ” We Empower 6.0″

கோலாலம்பூர்:

மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் இத்தவணைக்கான முதல் செயல்திட்டமாக We Empower  6.0 திகழ்கிறது.

We Empower 6.0 என்பது அனைத்து இன மாணவர்களையும் உள்ளடக்கிய சமமான, தரமான கற்றல் வாய்ப்புகளை ஊக்குவிக்கும் தேசிய அளவிலான நிகழ்ச்சியாகும். பெண்கள் மற்றும் ஆண்களுக்கான அனைத்து அடிப்படைகளிலும் நீதியை உறுதி செய்வதன் முக்கியத்துவம் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில், இது முதன்முதலில் 2018 ஆம் ஆண்டு “பாலின சமத்துவம்“ என்ற கருப்பொருளுடன் தொடங்கியது. இவ்வருடமும் இந்நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை மலாயாப் பல்கலைக்கழகப் பொறியியல் புலத்தில் நடைபெற்றது.

காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடந்தேறியது. நிபுணத்துவம் மற்றும் நெறிமுறைகள், டிஜிட்டல் கல்வியறிவு திறன், பகுப்பாய்வு மற்றும் திட்ட மேலாண்மை, நிதியியல் கல்வியறிவு, HRDcorp, சுய-மேம்பாடு போன்றவை அங்கங்கள் இந்நிகழ்ச்சியின் அடித்தளமாக அமைந்தன. We Empower 6.0 இன் கருப்பொருள் SDG இலக்குகளை இலக்காகக் கொண்டு “நிதி மேலாண்மை திறன்களை மேம்படுத்துதல்” என்பதாகும். இது தரமான கல்வியை அடிப்படையாகக் கொண்டது. இத்திட்டத்தின் நிறைவு விழா செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் மற்றும் We Empower தோற்றுநர் செல்வி கௌசல்யா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பிக்கப்பட்ட்து.

64-வது தமிழ் பேரவைத் தலைவர் சர்வேந்திரன் சந்தர் பேசுகையில், தமிழ் பேரவையின் வரலாறு குறித்தும், அடுத்து மேற்கொள்ளப்படும் திட்டம் குறித்தும் பேசினார். மாணவர்களிடையே உள்ள பணத் தட்டுப்பாடு மற்றும் உலகளாவிய சூழலை உள்ளடக்கிய SDG இலக்குகள் பற்றிய தெளிவையும் இந்த திட்டம் நாளைய சமுதாயத்திற்கு மிகவும் முக்கியமானது என்றும் அவர் மாணவர்களிடையே தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்து, சிறப்பு விருந்தினரான செனட்டர் டத்தோ சிவராஜ், இதுபோன்ற கழகங்ககளில் நடத்தும் நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்று அனைத்து வகையான நுணுக்கங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். We Empower 6.0 இயக்குநர் ஹரிணி கருணாகரன், தனது செயற்குழு உறுப்பினர்களை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். இத்திட்டம் சிறப்பாக நிறைவேற உதவிய அனைத்து செயற்குழு உறுப்பினர்களுக்கும், தலைவர், சக உறுப்பினர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here