வாஷிங்டன், டொமிகன் குடியரசில் இருந்து ரெட் ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று 126 பயணிகளுடன் மியாமி சா்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி அருகில் இருந்த தகவல் தொடா்பு கோபுரத்தின் மீது மோதியது.
இதனால் விமானத்தின் வலதுபுற இறக்கை தீப்பிடித்து எரிந்து கரும்புகை வெளியேறியது. இந்த விபத்தில் விமானத்தில் முன்பகுதி சேதமானது. விமானத்தில் இருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து வெளியேறினா்.
இதனையடுத்து விரைந்து வந்த விமான நிலைய தீயணைப்பு படைவீரா்கள் இரசாயன நுரையை பீய்ச்சி அடித்து எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த விபத்தில் 3 பயணிகள் காயம் அடைந்தனா். அவா்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந்த விபத்து காரணமாக மியாமி விமானநிலையத்தில் இருந்து விமானங்கள் தாமதமாக புறப்பட்டதாக விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
Close-up video of passengers getting off the plane | #ONLYinDADE pic.twitter.com/o3YyMU9mgx
— ONLY in DADE (@ONLYinDADE) June 22, 2022