நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பாஜக சார்பில் குஷ்பு பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவிற்கு, குஷ்பு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது மருத்துவர்களின் அறிவுறுத்தல் படி, என்னால் இனி நாடாளுமன்றத் தேர்தலில் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ள முடியாது. சமூக வலைதளங்கள் மூலம் பிரச்சாரம் மேற்கொள்வேன் என்று கூறினார்.




















