இளைஞர்களிடையே திவால் நிலை அதிகரிப்பு; பிரதமர் கவலை

கோலாலம்பூர்: இளைஞர்களிடையே அதிக எண்ணிக்கையிலான திவாலானவர்கள், பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் கவனத்தை ஈர்த்துள்ளனர். அவர் நிலைமை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார்.

இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, அவசரக் கவனம் தேவைப்படும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பேங்க் நெகாரா மலேசிய கவர்னர் நோர் ஷம்சியா முகமட் யூனுஸுடன் விவாதிப்பதாக அவர் கூறினார்.

இது தொடர்பான சட்டத்தை மறுஆய்வு செய்ய சட்ட அமைச்சர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபருடன் இந்த விஷயத்தை விவாதிப்பதாகவும் இஸ்மாயில் கூறினார்.

இளைஞர்களிடையே திவால்நிலை குறித்த சமீபத்திய புள்ளிவிவரங்களைப் பார்த்த பிறகு நான் கவலைப்படுகிறேன். இந்நிலைமைக்கு தீர்வுகாணப்படாவிட்டால் எண்ணிக்கை மேலும் உயரும் எனவும் நான் அஞ்சுகின்றேன்.

அரசாங்கம் முன்பு வரம்பை உயர்த்தியது. தொற்றுநோய்களின் போது திவாலானவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளையும் நாங்கள் தாமதப்படுத்தினோம்.

என்னை நம்புங்கள், இளைஞர்களின் எதிர்காலம் எங்களின் முன்னுரிமை நிகழ்ச்சி நிரலாகும்  என்று அவர் இன்று உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற பாரிசான் நேஷனல் இளைஞர்களின் தொழில் கண்காட்சியின் நிறைவு விழாவில் கூறினார்.

மே 23 அன்று, மார்ச் மாதம் வரை நாட்டில் 287,411 பேர் திவாலானவர்களாக அறிவிக்கப்பட்டதாகவும், அவர்கள் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதாகவும் ஊடகங்களால் அறிவிக்கப்பட்டது. இதில் வேலையில்லாதவர்களும் வேலை செய்பவர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.

திவால் துறையின் முதன்மை திவாலா நிலை அதிகாரியான ஜரீனா அலியாஸின் கூற்றுப்படி,  திவாலானவர்களின் எண்ணிக்கையில் சிலாங்கூர் 71,659, கோலாலம்பூர் 45,630 என முன்னணியில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here