சிலாங்கூர் விமானப் போக்குவரத்து கண்காட்சி இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் ஏற்பாடு

இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட், தனது வான்வெளித்துறைப் பிரிவான சிலாங்கூர் டாருல் ஏசான் ஏரோஸ்பேஸ் இண்டாஸ்ட்ரி கோர்டினேஷன் ஆபீஸ் (எஸ்-டைகோ) துறையுடன் இணைந்து சிலாங்கூர் விமானப் போக்குவரத்துக் கண்காட்சியை நடத்துகின்றது என்று இண்வெஸ்ட் சிலாங்கூர் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஹசான் அஸாரி தெரிவித்தார்.

             
2ஆவது முறையாக நடைபெறும் சிலாங்கூர் விமானப் போக்குவரத்துக் கண்காட்சி இவ்வாண்டு செப்டம்பர் 8ஆம் தேதி தொடங்கி 10ஆம் தேதி வரை ஸ்கைபார்க் ரிஜினல் அவியேஷன் ஙெ்ண்டரில் (ஸ்கைபார்க் ஆர்ஏசி சுபாங்) நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார். வர்த்தக விமானப் போக்குவரத்து, பொது விமானப் போக்குவரத்து, ஹெலிகாப்டர் சேவை ஆகியவை தொடர்பான விரிவான சந்தை வாய்ப்புகளை இக்கண்காட்சி வெளிப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவிலும் இந்தப் பிரதேசத்திலும் கிடைக்கக்கூடிய விமானப் போக்குவரத்து சேவைத்துறைக்கான வாய்ப்புகளை இக்கண்காட்சி வெளிப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.
உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களின் சுமார் 70 கண்காட்சிக்கூடங்கள் இதில் அமைக்கப்படும். உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் வர்த்தக முதலீட்டு வாய்ப்புகளை இதன்மூலம் கண்டறிய முடியும்.
இவ்வாண்டு 700 மில்லியன் ரிங்கிட் அளவிலான வர்த்தகப் பரிமாற்றங்கள் கிடைக்கும் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 8 ஆயிரம் பேர் வருகை தருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.


இக்கண்காட்சியில் சுமார் 30 விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆடம்பர தனியார் ஜெட் விமானக்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே இந்தப் பிரதேசத்தில் நடைபெறும் ஒரே விமானப் போக்குவரத்து வர்த்தகக் கண்காட்சி இதுவாகும் என்று மாநிலத் தொழில் வர்த்தகத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சோங் கிம் தெரிவித்தார். பிரதேச அளவிலும் உலக அளவிலும் இத்துறையில் பங்கேற்போருக்கு இக்கண்காட்சி ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்று அவர் மேலும் சொன்னார்.
சபுரா ஏரோ, டெஸ்தினி அவியா டெக்னிக், எபிக் ஏரோ, டிஜேஐ அகாடமி, சுபெர்ப் எக்ஸெஸ், பிசிஎஸ் அவியேஷன், பைபஸ் மெட்டல்ஸ், சிரிம், இண்டர்நேஷனல் ஏரோ டிரெய்னிங் அகாடமி ஆகியவை இக்கண்காட்சியில் பங்கேற்பது உறுதிசெய்யப் பட்டிருக்கிறது. மேலும் பல நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்கலாம் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கண்காட்சியில் பங்கேற்க விரும்புவோர் கீழ்க்காணும் அகப்பக்கத்தில் வலம் வரலாம். www.selangoraviationshow.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here