குவாந்தான், ஜூன் 27 :
ECRL ரயில் திட்டத்தின் கட்டுமானப்பணிகளுக்காக , கோலாலம்பூர்-காராக் (KLK) அதிவேக நெடுஞ்சாலையின் KM55.35 முதல் KM55.85 வரையிலான (லெந்தாங்) பகுதி, இன்று இரவு 11 மணி முதல் 30 நிமிடங்கள் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருக்கும்.
ANIH பெர்ஹாட்டின் மூத்த பொது மேலாளர் ரட்ஸிமா முகமட் ராட்ஸி கூறுகையில், அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க இரு திசைகளிலும் உள்ள சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்படும் என்று, இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இரவு 11.30 மணிக்குப் பிறகு, பாதையின் இரு திசைகளிலும் உள்ள இடது பக்கப் பாதை மட்டுமே போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்றும், நெடுஞ்சாலையின் அனைத்துப் பாதைகளும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) காலை 5 மணிக்கு முழுமையாக திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெந்திங்கில் ECRL சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கனரக இயந்திரங்களின் நடவடிக்கையை எளிதாக்கவே இந்த சாலை மூடப்பட்டுகிறது.
சாலைப் பயனர்கள் தங்கள் பயணத்தைத் திட்டமிடவும், இருப்பிடத்தில் உள்ள ஊழியர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகின்றனர் என்று அவர் மேலும் கூறினார்.