டாக்டர் மகாதீருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய நஜீப்; இது அவரின் ‘பெருந்தன்மை’ என்று வாழ்த்தும் நெட்டிசன்கள்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 11 :

நேற்று தனது 97வது பிறந்தநாளைக் கொண்டாடிய டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் எளிய முறையில் பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவிட்டிருந்தது நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பில் நஜீப் அவரது முகநூலில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் “பிறந்தநாள் வாழ்த்துக்கள். துன் டாக்டர் மகாதீர், நிறைவாகவும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துக்கள், ”என்று அவர் பதிவிட்டிருந்தார்.

அவரது பதிவு ஒரு மணி நேரத்திற்குள், 21,000 ‘லைக்குகள்’ மற்றும் சுமார் 1,000 கருத்துகள் வந்தன, பெரும்பாலும் நஜீப் தன்னை “மிக மோசமாக” விமர்சிக்கும் ஒருவரை இவ்வாறு வாழ்த்துவது அவரது பெருந்தன்மைக்யை காட்டுகிறது என்று பலர் அவரைப் பாராட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here