மானிய விலையில் பெற்ற சமையல் எண்ணெயை பூஜை எண்ணெயுடன் கலந்து மோசடி; ஒருவர் கைது

பட்டர்வொர்த், ஜூலை 12 :

மானிய விலையில் கிடைக்கும் சமையல் எண்ணெய், பூஜை எண்ணெய்களின் கலவையுடன் கலக்கப்பட்டு மீண்டும் பேக் செய்யப்பட்டு, நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுவது கண்டிபிடிக்கப்பட்டது.

கடந்த சில மாதங்களாக மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை முறைகேடாக அபகரித்து, அதில் அதிக லாபம் ஈட்டும் கும்பலின் இந்த நடவடிக்கை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இன்று தாமான் ஸ்ரீ முர்னி, சுங்கை துவாவில் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகம் (KPDNHEP) நடத்திய சோதனையைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை கண்டறியப்பட்டது.

இன்று நண்பகல் 1 மணியளவில் நடந்த சோதனையில் மொத்த வியாபாரி என்று நம்பப்படும் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

பினாங்கு KPDNHEP தலைமை அமலாக்க அதிகாரி, ஏ மோகன் கூறுகையில், சோதனைக்கு முன், அவரது துறைக்கு இந்த கும்பலின் நடவடிக்கை குறித்த பொதுமக்களிடமிருந்து புகார்களைப் பெற்ற பிறகு, ஐந்து நாட்கள் உளவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

“வீட்டை சோதனையிட்டபோது, ​​அந்த நபர் வீட்டின் பின்புறம் நிறுத்தப்பட்டிருந்த லோரியில் மானிய விலையில் சமையல் எண்ணெய் அடங்கிய பிளாஸ்டிக்கை வெட்டி, அதிலிருக்கும் எண்ணெய்யை தொழில்துறை பயன்பாட்டிற்காக பாட்டிலில் அடைக்கப்படுவதற்கு முன் பீப்பாய்களில் சேமித்து வைக்கப்படுகிறது.

“பின்னர் இந்த எண்ணெய் ஒரு கிலோவிற்கு RM6 முதல் RM8 வரை விற்கப்படுகிறது, இதன்னால் அவர் பல மடங்கு லாபம் ஈட்டுகிறார்,” என்று அவர் இன்று கோழி, முட்டை மற்றும் சமையல் எண்ணெய் (Op ATM) சோதனை நடவடிக்கைக்கு பிறகு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மோகன் மேலும் கூறுகையில், அந்த தனிநபரிடம் கட்டுப்பாடான பொருட்களை வைத்திருக்கும் உரிமம் இருப்பது கண்டறியப்பட்டது, “இருப்பினும், கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்லும்போது தங்கள் உரிமங்களை தவறாகப் பயன்படுத்தியுள்ளனர்.

“லோரியில் இருந்த 1,564 கிலோ மானிய விலை சமையல் எண்ணெயை பறிமுதல் செய்யப்பட்டதுடன் , RM108,960 மதிப்புள்ள லோரியையும் பறிமுதல் செய்தோம்,” என்று அவர் கூறினார்.

இந்த வழக்கு விநியோக கட்டுப்பாடு சட்டம் 1961 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது.

பணமோசடி தடுப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நிதியுதவி சட்டம் 2001 இன் படி விசாரணைக்குட்படுத்தவும் தமது துறை பரிந்துரைத்ததாகவும், அந்த நபர் வைத்திருந்த கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here