ஹஜ் ஊழலில் மேலும் 5 பேர் கைது

இரண்டு பயண முகவர்கள் சம்பந்தப்பட்ட ஹஜ் பயணத் தொகுப்பு  மோசடி செய்த விவகாரத்தில் விசாரணைக்கு உதவ மேலும் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் அஸ்மி அபு காசிம் கூறுகையில், 28 முதல் 51 வயதுக்குட்பட்ட இரண்டு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் என ஐந்து சந்தேக நபர்களும் ஜூலை 14 முதல் ஜூலை 16 வரை மூன்று நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். பின்னர் ஜோகூர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

விசாரணை முடிந்ததும், விசாரணை ஆவணங்கள் அடுத்த நடவடிக்கைக்காக சட்டத்துறை தலைவர் அறையில் ஒப்படைக்கப்படும் என்றார். வழக்கு பற்றிய தகவல் தெரிந்தவர்கள் கோலாலம்பூர் காவல்துறையின் ஹாட்லைன் எண் 03-2115 9999 அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த மாத தொடக்கத்தில், இந்த மோசடி தொடர்பாக 57 போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் RM2.37 மில்லியனுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறினர். தகவல்களின்படி, ஜூலை 9 ஆம் தேதி ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அதில் ஒரு பயண நிறுவனத்தின் உரிமையாளர், ஒரு முகவர் மற்றும் இரண்டு ஊழியர்கள் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here