பாலியல் துன்புறுத்தல் மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது

பாலியல் துன்புறுத்தல் மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இன்றும் நேற்றும் 26 நாடாளுமன்ற உறுப்பினர் பங்கேற்ற விவாதங்களுக்குப் பிறகு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன் இரண்டாம் வாசிப்புக்காக நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.

பாலியல் துன்புறுத்தலை இயல்பாக்குவதற்கு முற்றுப்புள்ளி வைப்பதில் இந்த மசோதா முக்கியமானது மற்றும் சரியான நேரத்தில் நிறைவேற்றப்பட்டது. பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக (பாதிக்கப்பட்டவர்களுக்கு) பாதுகாப்பை வழங்க மலேசியாவிற்கு இது முதல் படியாகும் என்று பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரீனா ஹருன் தனது இறுதி உரையில் கூறினார்.

மசோதாவை உருவாக்குவதில் ஈடுபட்ட பெண்கள் உரிமைக் குழுக்கள், மத்திய மற்றும் மாநில அமைப்புகள் மற்றும் எம்.பி.க்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். பாலியல் துன்புறுத்தல் சட்டம் குறித்து பொது மக்களுக்கு கல்வி கற்பிக்க அமைச்சகம் பத்திரிகைகளை அணுகி நாடு தழுவிய அளவில் விழிப்புணர்வை ஏற்பாடு செய்யும் என்று ரீனா மேலும் கூறினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை மசோதா தாக்கல் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இது டிசம்பரில் முதல் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here