பெண் அரசு ஊழியரிடம் கொள்ளையடித்த 14 வயது சிறுவன்..!

புத்ராஜெயா, ஜூலை 23 :

இங்குள்ள அரசு ஊழியர் குடியிருப்பில் நேற்று, ஒரு பெண் அரசு ஊழியரை கொள்ளையடித்து துன்புறுத்திய வழக்கில் இரண்டாம் படிவ மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

புத்ராஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ஏ அஸ்மாடி அப்துல் அஜீஸ் கூறுகையில், 14 வயது சந்தேக நபர், இங்குள்ள ஒரு பள்ளியில் படிக்கும் மாணவர், நேற்று நண்பகல் 1.20 மணியளவில் IPD புத்ராஜெயாவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

“ஐபோன் 8 ஐ தனது குடும்பத்தினரிடம் இருந்து பெற முயற்சித்ததைத் தொடர்ந்து, அதனை பெறமுடியாது போனதால், அவர் அத்தகைய செயலில் ஈடுபட்டதாக தெரியவருகிறது.

நேற்றைய தினம், இங்குள்ள அரசு உத்தியோகத்தர் ஒருவரது குடியிருப்பில் மாலை 5.30 மணியளவில் 30 வயதுடைய பெண் தனது வீட்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த போது, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புகார்தாரரின் சாட்சியத்தில் இருந்து போட்டோஃபிட் முறையிலும், அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமெரா உதவியுடனும் சந்தேக நபர் கண்டுபிடிக்கப்பட்டதாக அஸ்மாடி கூறினார்.

விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ஏனைய சாட்சிகளின் சாட்சியங்களை போலீசார் பூர்த்தி செய்து வருவதாகவும், சந்தேக நபருக்கான விளக்கமறியல் மனு நாளை புத்ராஜெயா நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

“கொள்ளை குற்றவியல் சட்டம் பிரிவு 392 மற்றும் பாலியல் வன்கொடுமைக்கான தண்டனைச் சட்டம் பிரிவு 354 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here