கெத்தும் நீரை பதப்படுத்தி விற்பனை செய்ததாக நம்பப்படும் ஐவர் கைது

பாலிக் பூலாவ், ஜூலை 24 :

சுங்கை ஆரா, பாயான் லெப்பாஸில் உள்ள ஒரு வீட்டில் நேற்று போலீசார் நடத்திய சோதனையில், கெத்தும் நீரை பதப்படுத்தி விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.

தென்மேற்கு மாவட்ட காவல்துறை தலைமையகம் முகநூலில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி, 29 முதல் 37 வயதுக்குட்பட்ட ஐந்து ஆண்கள் 200 பதப்படுத்தப்பட்ட கெத்தும் நீர் மற்றும் 10 கிலோகிராம் எடையுள்ள கெத்தும் இலைகள் கொண்ட இரண்டு கருப்பு பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுடன் கைது செய்யப்பட்டனர்.

“இந்தக் கும்பல் சுங்கை ஆரா மற்றும் பாயான் லெப்பாஸ் பகுதிகளைச் சுற்றி, ஒவ்வொரு பாக்கெட் கெத்தும் தண்ணீரின் விலையும் RM5 எனும் விலையில் விற்கப்படுவதாக நம்பப்படுவதுடன் அவர்கள் கெத்தும் தண்ணீரை பதப்படுத்துவதற்கும் பேக்கேஜிங் செய்வதற்கும் பயன்படுத்துவதாக நம்பப்படும் பல்வேறு உபகரணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அந்தச் சோதனையின் போது, ​​வீட்டின் அருகே நடப்பட்டிருந்த சில கெத்தும் மரத்தண்டுகளையும் போலீசார் கண்டுபிடித்தனர், அத்தோடு அவற்றை வெட்டி அகற்ற எங்கள் தரப்பு உடனடியாக நடவடிக்கை எடுத்தது.

விசாரணைக்கு உதவுவதற்காக சுயதொழில் செய்யும் ஐந்து பேரும் இப்போது நான்கு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், விஷச் சட்டம் 1952 இன் பிரிவு 30(3) இன் படி வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here