காணாமற்போனோர் தொடர்பில் கிளந்தானில் மொத்தம் 509 புகார்கள் பதிவு

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 28 :

கடந்த ஐந்தாண்டுகளில் மொத்தம் 509 காணாமல் போனோர் தொடர்பான புகார்களை கிளந்தான் மாநில காவல்துறை பதிவு செய்துள்ளது.

இருப்பினும், 2016 மற்றும் 2020 க்கு இடையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து அறிக்கைகளும் மாநில புலனாய்வாளர்களால் தீர்க்கப்பட்டதாக கிளந்தான் காவல்துறையின் பதில் தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹாருன் கூறினார்.

காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் 18 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், கோத்தா பாரு மற்றும் பாசீர் மாஸ் ஆகிய இடங்களில் அதிக எண்ணிக்கையிலான காணாமல் போனோர் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here