புதிய வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 1,141,749 பேர் – டத்தோ மாஸ் எர்மியாத்தி

கோலாலம்பூர், ஆகஸ்ட் 2 :

தேர்தல் ஆணையத்தால் (SPR) சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 21,113,234 பேர் என்று பிரதமர் துறையின் துணை அமைச்சர் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்), டத்தோ மாஸ் எர்மியாத்தி சம்சுடின் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த ஜூன் 16, 2022 வரையான துணை வாக்காளர் பதிவேட்டின் அடிப்படையில் இப்புள்ளி விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

அந்த எண்ணிக்கையில், மொத்தம் 1,141,749 பேர் அல்லது 5.4 சதவீதம் பேர் 18 முதல் 20 வயதுக்குட்பட்ட புதிய மற்றும் இளைய வாக்காளர்கள், மீதமுள்ள 19,971,485 பேர் அல்லது 94.6 சதவீதம் பேர் 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என்றார்.

“2021 டிசம்பர் 15 அன்று வாக்காளர் வயது வரம்பை 21 முதல் 18 வயது வரை அமல்படுத்தியதைத் தொடர்ந்து, 5.8 மில்லியன் வாக்காளர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பைக் கண்டுள்ளோம், அதில் 1.2 மில்லியன் பேர் 18 முதல் 20 வயதுடைய இளைஞர்களைக் கொண்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

முன்னதாக, டத்தோ முகமட் ஃபாசியா முகமட் ஃபக்கே (PN-Sabak Bernam) இளம் வாக்காளர்களின் எண்ணிக்கையையும், நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க, மற்றும் திறமையான தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில், குறிப்பாக 15வது பொதுத் தேர்தலில் விழிப்புணர்வை அதிகரிக்க அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதைக் கூறுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில், அரசு நிறுவனங்கள், அமைப்புகள், சங்கங்கள், அரசு சாரா நிறுவனங்கள் போன்ற பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பின் மூலம் வாக்காளர் கல்வித் திட்டத்தை குறிப்பாக அரசியல் துறை சார்ந்த நிகழ்வுகள் மற்றும் கல்வியாளர்கள் அல்லது மாணவர்களுக்கு தேர்தல் செயல்முறை பற்றிய கல்வி மற்றும் புரிதலை வழங்கும் செயல் முறைகளை தீவிரப்படுத்தியுள்ளது முன்னெடுத்து வருகிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here