டோக்கியோ: ஜப்பான் புகுஷிமாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.6 ஆக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.சில இடங்களில் நிலநடுக்கம் 4 ரிக்டர் என்ற அளவில் குறைவாகவும்.. ஒரு சில பகுதிகளில் 7 என்ற அளவில் அதிகமாகவும் நிலநடுக்கம் பதிவானதாக கூறப்படுகிறது.
டோக்கியோவில் இருந்து 270 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. கடலுக்கு அடியில் நிலநடுக்கம் 60 கிமீ ஆழத்தில் பதிவாகி உள்ளது. டோக்கியோவில் கடுமையான மின்தடை நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்டது.நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றால் கடலுக்கு அருகே இருக்கும் மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டு உள்ளனர். இந்த நிலநடுக்கம் காரணமாக பெரிய சேதமோ, உயிர் இழப்போ ஏற்படவில்லை.
அதேபோல் நிலநடுக்கம் காரணமாக அங்கு உள்ள செயல் இழந்த டைச்சி அணுமின் நிலையத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. 2011ல் இதே புகுஷிமா கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல் வடக்கு ஜப்பான் பகுதியில் இப்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2011ல் இங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 9 ஆக பதிவானது. அப்போது அந்த நிலநடுக்கம், சுனாமி, புகுஷிமா அணு உலை கசிவு காரணமாக 20 ஆயிரம் பேர் மொத்தமாக பலியானார்கள். ஒரே நேரத்தில் ஒரு பக்கம் சுனாமி.. இன்னொரு பக்கம் அணு உலை கசிவு என்று பெரிய இயற்கை பேரழிவை அப்போது ஜப்பான் புகிஷிமா எதிர்கொண்டது.ஆனால் இந்த முறை சுனாமி ஏற்படாத நிலையில் ஜப்பானில் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.