RM250,000 பெறுமதியான ஹெரோயின் கிளாந்தான் போலீசாரால் பறிமுதல் – ஒருவர் கைது

கோத்தா பாரு, ஆகஸ்ட் 8 :

தும்பாட்டின் பெங்கலான் குபோரில், கிளாந்தான் போலீசார் கடந்த வியாழன் அன்று நடத்திய சோதனையின் போது 53 வயது சந்தேக நபர் ஒருவரை கைது செய்ததுடன் RM250,000 மதிப்புள்ள போதைப்பொருட்களையும் கைப்பற்றினர்.

ஆகஸ்ட் 4 முதல் 6 வரை மூன்று நாட்கள் நடைபெற்ற Op TAPIS நடவடிக்கையின்போது, சந்தேக நபர் இரவு 8.03 மணிக்கு கைது செய்யப்பட்டதாக கிளாந்தான் காவல்துறை தலைவர், டத்தோ முகமட் ஜாக்கி ஹாருன் தெரிவித்தார்.

“இந்தச் சோதனையின்போது, ​​சந்தேக நபர் ஓட்டிச் சென்ற ஹோண்டா EX-5 மோட்டார் சைக்கிளின் வண்டியில் C.D.Sungeigolok Supermarket CO.LTD என்று பெயரிடப்பட்ட பச்சை நிற பிளாஸ்டிக் பொட்டலத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.

“மேலும் விசாரணையில், 650 கிராம் எடையுள்ள போதைப்பொருட்கள் இருப்பதாக நம்பப்படும் 125 போத்தல்களை போலீசார் கண்டுபிடித்தனர்,” என்று, இன்று கிளாந்தான் காவல்துறை தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

போதைப்பொருள் சோதனையில் நேர்மறை பதிலை பெற்ற சந்தேக நபர், ஆகஸ்ட் 5 முதல் ஏழு நாட்களுக்கு போலீஸ் தடுப்பு காவலில் வைக்கப்படுவார் என்றும், ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் விசாரணைகள் நடத்தப்படும் என்றும் முஹமட் ஜாக்கி கூறினார்.

மூன்று நாதுகள் மேற்கொள்ளப்பட்ட Ops Tapis நடவடிக்கையில், மாநிலம் முழுவதும் மொத்தம் 108 போதைப்பித்தர்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

அதே நேரத்தில் இந்த காலகட்டத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களின் மொத்த மதிப்பு RM279,115.70 என்றும் இது 9,114 போதைப்பித்தர்கள் பயன்படுத்த போதுமானது” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here