செப்டம்பர் 1 முதல் குறைவான வேலை நேரம் அமல் – துணை மனிதவள அமைச்சர்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 10 :

வாராந்திர வேலை நேரத்தை 48 மணி நேரத்திலிருந்து 45 மணி நேரமாகக் குறைக்கும் வேலைச் சட்டத்திருத்தம் செப்.1 முதல் அமல்படுத்தப்படும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் உடன்படிக்கையின்படி, தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்காகவும், வேலை நேரங்களில் நெகிழ்வுத்தன்மையை வழங்குவதற்காகவும் இந்த திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்று துணை மனிதவள அமைச்சர் டத்தோ அவாங் ஹாஷிம் கூறினார்.

இந்த சட்டத்திருத்தங்கள் மூலம், வேலை நேரம், வேலை நாட்கள் அல்லது பணியிடங்களின் பொருத்தத்திற்கு ஏற்ப வேலை செய்ய, உதாரணமாக கோவிட்-19 போன்ற அவசரகால சூழ்நிலைகளில் வீட்டிலிருந்து வேலை செய்வது போன்ற விண்ணப்பங்களை முதலாளிகளிடம் விண்ணப்பிக்க முடியும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here