கோத்தபாய ராஜபக்ச சிங்கப்பூரில் தங்கியிருந்த ஹோட்டல் கட்டணத்தின் தொகை குறித்து அதிர்ச்சி

இலங்கையின் முன்னாள் அதிபர்  கோத்தபாய ராஜபக்ச சிங்கப்பூரில் தங்கியிருந்த காலப்பகுதியில் 67 மில்லியன் ரூபாவை ஹோட்டல் கட்டணமாக செலுத்தியதாக கூறப்படுகிறன்றன.

முன்னாள் அதிபர்  கோத்தபாய ராஜபக்சவும் அவரது மனைவி அயோமா ராஜபக்சவும் கடந்த 11ஆம் தேதி தாய்லாந்து செல்லும் வரை சிங்கப்பூரில் உள்ள “மரினா பே சாண்ட்ஸ்” ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

கோட்டபாய ராஜபக்ச சிங்கப்பூரில் தங்கியிருந்த ஹோட்டல் கட்டணத்தின் தொகை குறித்து அதிர்ச்சி | Gotabayastay Singapore Amount Of The Hotel Bill

ஹோட்டலின் தங்குமிட கட்டணமாக செலவிடப்பட்ட 67 மில்லியன் ரூபாவை அவன்ட் கார்ட் நிறுவனத்தின் உரிமையாளர் நிஷ்ஷங்க சேனாதிபதி செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 இதேவேளை தற்போது தாய்லாந்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அந்நாட்டிலுள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்கு தாய்லாந்து அரசாங்கத்திடம் அனுமதி கோரிய போதிலும் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கோட்டபாய ராஜபக்ச சிங்கப்பூரில் தங்கியிருந்த ஹோட்டல் கட்டணத்தின் தொகை குறித்து அதிர்ச்சி | Gotabayastay Singapore Amount Of The Hotel Bill

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தங்கியிருக்கும் ஹோட்டல் வளாகத்தை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என தாய்லாந்து அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக தாய்லாந்தின் பேங்காக் போஸ்ட் செய்தித்தாள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here