கோலாலம்பூர்:
பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் முக்கியத் திட்டங்களுக்கு, மலேசியா, தொடர்ந்து, உறுதியளிப்பதாக, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும், உறுதிப்படுத்தினார்.
கிழக்குக் கடற்கரை ரயில் இணைப்புத் திட்டமும், குவாந்தான் துறைமுக விரிவாக்கம் ஆகியவை வெறும், பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் மட்டுமல்ல. மாறாக, அவை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, பிராந்திய ஒருங்கிணைப்புக்கான, ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்று, அவர், வலியுறுத்தினார்.
சீனாவுக்கு மேற்கொண்ட, தனது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டுப் பயணத்தின்போது (SCO Summit), சீனா குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க்’ தொலைக்காட்சிக்கு, அளித்த நேர்காணலில், அன்வார், இந்தத் திட்டங்கள் குறித்து, பேசினார். RM74 பில்லியன் ரிங்கிட் செலவில், 665 கிலோமீட்டர்* தூரம் கொண்ட இசிஆர்எல்’ திட்டம், 90% நிறைவடைந்துள்ளது. இது, பயணிகளின் பயண நேரத்தையும், போக்குவரத்துச் செலவுகளையும், குறைக்கும் அதேவேளையில், ரயில் நிலையங்களுக்கு அருகில், சிறு வணிகங்களின் வளர்ச்சியைத் தூண்டும். குறிப்பாக, கிராமப்புற, ஏழ்மையானப் பகுதிகளில், இது, வளர்ச்சியை உருவாக்கும்.
மேலும் எல்லை கடந்த வர்த்தகத்தை அதிகரிக்க, தாய்லாந்து எல்லைக்கு, மேலும், 25 கிலோமீட்டர், ரயில் பாதையை நீட்டிக்க, பேச்சுவார்த்தைகள், நடந்து வருகின்றன. மலேசியா–சீனா குவாந்தான் தொழில் பூங்காவுடன் தொடர்புடைய, குவாந்தான் துறைமுகத்தின் விரிவாக்கம், வரலாற்று ரீதியாக, கவனிக்கப்படாத, கிழக்குக் கடற்கரையை, தென்கிழக்கு ஆசியாவின், ஒரு முக்கிய வர்த்தக மையமாக, மாற்றுவதன் மூலம், சமச்சீர் வளர்ச்சியை, மீண்டும், நிலைநிறுத்த, இலக்கு கொண்டுள்ளது. கிராமப்புறச் சமூகங்கள், நாட்டின் செழிப்பைப், பகிர்ந்துகொள்வதை, உறுதி செய்வதே, மலேசியாவின் தொலைநோக்குப்பார்வை என்று, இந்த நடவடிக்கை, பிரதிபலிப்பதாக, அன்வார், தெரிவித்தார்.




















