இல்லாத முதலீடுகள் தொடர்பான மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் 10 பேர் கைது

கோலாலம்பூர், ஆகஸ்ட் 23 :

இல்லாத இணைய முதலீட்டு மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், நேற்று போலீசாரால் நடத்தப்பட்ட சோதனையில் மூன்று வெளிநாட்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் என்பவர்களோடு ஆறு உள்ளூர் ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.

இங்குள்ள ஜாலான் துன் ரசாக்கில் உள்ள ஒரு வளாகத்தில் மாலை 5.45 மணியளவில் நடந்த சோதனையில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர் என்று டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் நூர் டெல்ஹான் யஹாயா தெரிவித்தார்.

அவர்களிடமிருந்து ஒரு கணினி, மூன்று மடிக்கணினிகள், பல்வேறு பிராண்டுகளின் 17 மொபைல் போன்கள், ஒரு ஐபேட், ஒரு மோடம் மற்றும் வளாக அணுகல் அட்டை ஆகியவற்றையும் பறிமுதல் செய்ததாகவும் பறிமுதல் செய்யப்பட்ட உபகரணங்களில் ஆன்லைனில் இல்லாத முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடடதற்கான கூறுகள் இருப்பதும் கண்டறியப்பட்டது என்றார்.

“முதற்கட்ட விசாரணையில் இந்தக் கும்பல், அந்த வளாகத்தை வாடகைக்கு எடுத்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

“அவர்களில் மூன்று பேர் வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளாகவும், மீதமுள்ளவர்கள் மேற்பார்வையாளர்களாகவும் செயல்படுகிறார்கள்.

மேலும் விசாரணைக்காக அவர்கள் இன்று முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குற்றவியல் சட்டம் பிரிவு 420-ன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here