‘அஸாலினாவின் ராஜினாமாவை நான் ஏற்றுக்கொள்கிறேன்’ என்கிறார் பிரதமர்

கோலாலம்பூர், செப்டம்பர் 3 :

டத்தோஸ்ரீ அஸாலினா உத்மான் சைட்டின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் சட்டம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சிறப்பு ஆலோசகர் பதவியில் இருந்து அஸாலினா ராஜினாமா செய்ததை அவர் உறுதிப்படுத்தினார்.

“அவரது ராஜினாமா தொடர்பில் ஒவ்வொரு ஊடகமும் செய்தி வெளியிட்டதாக நான் நினைக்கிறேன். அவர் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார், நான் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டேன். அவ்வளவுதான்,” என்று சனிக்கிழமை (செப்டம்பர் 3) இஸ்மாயில் சப்ரி கூறினார்.

ஆகஸ்ட் 31 அன்று, தனது சிறப்பு ஆலோசகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய ஆகஸ்ட் 29 தேதியிட்ட கடிதத்தை அஸாலினா பிரதமர் துறை அலுவலகத்தில் சமர்ப்பித்ததாகவும், ஒரு மாத அறிவிப்புடன் அவரது ராஜினாமாவை பிரதமர் ஏற்றுக்கொண்டதாகவும் கூறியது.

ஒரு மாத அறிவிப்பு காலம் முழுவதும், அஸலினா அலுவலகத்தில் பணியாற்ற மாட்டார் என்றும் அது கூறியது. இதனைத்தொடர்ந்து பெங்கராங் சட்டமன்ற உறுப்பினருமான அஸாலினா பிரதமரின் சிறப்பு ஆலோசகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இருப்பினும், அஸாலினா ஆகஸ்ட் 31 அன்று வெளியிட்ட ஒரு பேஸ்புக் பதிவில், அவர் பதவி விலகவில்லை எனக் கூறியிருந்தார்.

முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை கொண்ட அஸாலினாவின் பதவி விலகல் சர்ச்சைக்கு ஒருவாறு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here