கோலா சிலாங்கூரில் தெருச் சண்டையில் ஈடுபட்ட அறுவர் கைது

கோலா சிலாங்கூர், செப்டம்பர் 5 :

இங்குள்ள கம்போங் குவாந்தானில் உள்ள தாமான் மேலோர் என்ற இடத்தில், நேற்று தெருச் சண்டையில் ஈடுபட்ட 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 4) மாலை 6.15 மணியளவில் இந்த சண்டை குறித்து தமது துறை எச்சரிக்கப்பட்டதாக கோலா சிலாங்கூர் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் ரம்லி காசா கூறினார்.

“இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கோலா சிலாங்கூர் சிஐடியின் குழு ஞாயிற்றுக்கிழமை இரவு 22 முதல் 35 வயதுடைய ஆறு பேரைக் கைது செய்தது.

“ செய்யப்பட்டவர்கள் விசாரணைகளுக்கு உதவுவதற்காக நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

“இந்த வழக்கை நாங்கள் கலவரம் மற்றும் ஆபத்தான ஆயுதங்களால் கடுமையாக காயப்படுத்தியதாக வகைப்படுத்தியுள்ளோம்” என்று அவர் இன்று திங்கள்கிழமை (செப்டம்பர் 5) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தின் 34 வினாடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களிலும் வாட்ஸ்அப்பிலும் பரவியது.

தாமன் மேலோர் சந்திப்பில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை நோக்கி ஆயுதங்கள் மற்றும் பொருள்களுடன் ஒரு குழு நடந்து செல்வதை வீடியோ காட்டுகிறது.

சண்டைக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்று துணைத் தலைவர் ரம்லி கூறினார்.

வழக்கு பற்றிய தகவல் தெரிந்தவர்கள் இன்ஸ்பெக் நூர் ஃபத்மாலியானி முகமட்டை 013-6716 313 என்ற எண்ணில் அல்லது சிலாங்கூர் காவல்துறையின் ஹாட்லைன் 03-2052 9999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here