காதல் மோசடியில் சிக்கி ஓய்வூதியம் பெறும் பெண்மணி RM199,550 ஐ இழந்தார்.

கோல திரெங்கானு, செப்டம்பர் 6 :

சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகமான நபரின் காதல் மோசடியில் சிக்கி ஏமாற்றப்பட்ட ஒரு ஓய்வூதியதாரர் RM199,550 ஐ இழந்தார்.

கோல திரெங்கானு மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் அப்துல் ரஹீம் முகமட் டீன் கூறுகையில், ஜூலை தொடக்கத்தில் 50 வயதுடைய பெண் ஒருவர் ஃபேஸ்புக் மூலம் ஒரு மனிதனை சந்தித்ததில் இருந்து இந்த சம்பவம் தொடங்கியது.

சந்தேக நபர் 145,000 USD (RM650,000) மதிப்புள்ள காசோலையை அவருக்கு வழங்குவதாக கூறி, பாதிக்கப்பட்டவரை வாட்ஸ்அப் செயலி மூலம் தொடர்புகொண்டார் என்று அவர் கூறினார்.

“பாதிக்கப்பட்டவருக்கு உறுதியளிக்கப்பட்ட காசோலையை விடுவிக்க பணம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது அதனால் பாதிக்கப்பட்டவர் மொத்தம் RM124,000 மதிப்புள்ள ரொக்கத்தை உள்ளடக்கிய ஆகஸ்ட் 10 முதல் 17 வரை ஒரு கணக்கில் 13 பரிவர்த்தனைகளை செய்தார்.

“சிறிது நேரத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர் வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொள்வதற்கு முன்பு பேஸ்புக் மூலம் மற்றொரு நபரை சந்தித்தார். அவர் சுங்கத் துறையிடம் இருந்து காசோலையை விடுவிப்பதற்கு பணம் செலுத்துமாறு கூறியதாகவும், அதனைத் தொடர்ந்து அவர் ‘ஆகஸ்ட் 23 ஆம் தேதி தொடங்கி ஆறு நாட்களுக்குள் இரண்டு வெவ்வேறு கணக்குகளுக்கு மொத்தம் RM75,550 பணத்தினை பாதிக்கப்பட்டவர் மீண்டும் வைப்பிலிடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டார்” என்று இன்று தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

இருப்பினும், பாதிக்கப்பட்டவருக்கு வாக்குறுதியளிக்கப்பட்டது போல காசோலை (பரிசு) கிடைக்கவில்லை மாறாக அவர் RM199,550 இழந்தார்.

பின்னர் தான் மோசடிக்கு ஆளானதாக புரிந்துகொண்ட பாதிக்கப்பட்டவர் கடந்த வியாழன் அன்று காவல்துறையில் புகார் அளித்ததாகவும், குற்றவியல் சட்டம் பிரிவு 420 இன் படி வழக்கு விசாரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

லவ் ஸ்கேம் போன்ற மோசடிகளுக்கு பலியாகாமல் இருக்க, சமூக ஊடகங்கள் மூலம் அறியப்படும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என மக்களுக்கு நினைவூட்டப்படுகிறது,” என்று அப்துல் ரஹீம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here