பள்ளிகளில் இனி முகக்கவசம் கட்டாயமில்லை

பள்ளி வளாகங்களில் முகக்கவசம் உள் அரங்கிலோ  அல்லது வெளிஅரங்குகளிலோ இனி கட்டாயமில்லை என்று மூத்த கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் ராட்ஸி ஜிடின் கூறினார்.

தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்க வீடியோ கிளிப் மூலம், பள்ளிகளில், குறிப்பாக நெரிசலான இடங்களில் முகக்கவச பயன்பாடு இன்னும் ஊக்குவிக்கப்படுகிறது. மேலும், பள்ளி பேருந்தில் பயணிக்கும் மாணவர்கள் எல்லா நேரங்களிலும் அவற்றை அணியுமாறு நினைவூட்டப்படுகிறார்கள்.

மிக முக்கியமாக பள்ளிச் சூழல் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

பள்ளிகளில் முகக்கவசம் பயன்பாடு தொடர்பான மேலதிக தகவல்கள் இன்று வெளியிடப்படவுள்ள ஊடக அறிக்கையில் உள்ளடக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். கட்டிடங்களுக்குள் முகக்கவசம் அணிவது இனி தனி நபர்களின் விருப்பம்   மட்டுமே என்று செப்டம்பர் 7 ஆம் தேதி சுகாதார அமைச்சகம் அறிவித்ததைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here