தமிழ்ப்பள்ளிகளுக்கு பக்கபலமாக இருப்பேன் -அமைச்சர் சிவகுமார்

புத்ரா ஜெயா,

மலேசிய திருநாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் குறிப்பாக தமிழ்ப் பள்ளிகள் மேம்பாட் டிற்கு தொடர்ந்து பக்கப் பலமாக இருப்பேன் என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார்.

எனது தொடக்க காலம் முதல் இதுநாள் வரை தமிழ்ப் பள்ளிகளுக்காக குரல் கொடுத்து வருகிறேன்.இதற்கு முன்னர் நாடாளுமன்றத்திலும் தமிழ்ப் பள்ளிகள் குறித்து கேள்வி எழுப்பியும் களத்தில் இறங்கி போராடியும் இருக்கிறேன்.அந்த வகையில் தமிழ் பள்ளிகளுக்கு எப்போதும் பக்கப்பலமாக இருப்பேன் என்று அவர் சொன்னார்.

தமிழ்ப்பள்ளிகளின் நலன்புரி இடங்களின் கூட்டமைப்பு இயக்கத்தின் தலைவர் வெற்றி வேலன் தலைமையில் தமிழ் ஆர்வலர்கள் இன்று அமைச்சர் சிவகுமாரை சந்தித்து தமிழ்ப் பள்ளிகள் எதிர்காலம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தையை நடத்தினர்.

இந்த சந்திப்பில் பேசிய அமைச்சர் சிவகுமார், தமிழ்ப்பள்ளிகள் நலன் கருதி போரா டும் அனைத்து தரப்பினருடன் இணைந்து ஒத்துழைப்பேன் என்றார்.

பத்துக்கும் குறைவான மாணவர்களை கொண்டிருக்கும் 26 தமிழ்ப்பள்ளிகளில் பத்து தமிழ்ப் பள்ளிகளை இடம் மாற்றம் செய்யும் பணி தொடங்கி விட்டது என்று இன்று மனித அமைச்சர் சிவகுமாரிடம் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் பள்ளிகளின் நலன் பொறி இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வெற்றி வேலன் தலைமையில் இன்று தமிழ் ஆர்வலர்கள் மனிதவள அமைச்சர் சிவகுமாருடன் முக்கிய பேச்சுவார்த்தையை நடத்தினர். இந்த சந்திப்பில் வெர்னாகுலர் ஸ்கூல் எக்ஸலன்ஸ் மையத்தை (Centre for Vernacular School Excellence) வழிநடத்தும் அருண் துரைசாமி பத்து தமிழ்ப் பள்ளிகளை இடம் மாற்றம் செய்யும் பணி தொடங்கி விட்ட தாக குறிப்பிட்டார்.

பேராக்கில் 10 பள்ளிகள், கெடாவில் 6 பள்ளிகள், பகாங்கில் 4 பள்ளிகள்,சிலாங்கூரில் 3 பள்ளிகள், ஜோகூரில் 2பள்ளிகள், நெகிரி செம்பிலானில் 1 பள்ளியும்10க்கும் குறைவான மாணவர்களை கொண்டிருக்கிறது. இந்த பள்ளிகளை உடனடியாக காப்பாற்றப்படவில்லை என்றால் மூடும் நிலைக்குதள்ளப்படும்.

இந்த பள்ளிகள் மூடப்படாமல் இருக்க இடமாற்றம் செய்ய இரு மாதங்களுக்கு முன்பு மனிதவள அமைச்சர் சிவகுமாருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.இதன் பயனாக இப்போது முதல் கட்டமாக பத்து தமிழ்ப் பள்ளிகளை இடமாற்றம் செய்யும் பணிகள் தொடங்கி விட்டதாக அருண் துரைசாமி உற்சாகத்துடன் குறிப்பிட்டார்.

பேராக் மாநிலத்தில் SJK (T) ladang kelapa Bali (8 மாணவர்கள்),SJK (T) ladang Sungai Bogak (8 மாணவர்கள்), SJK (T) Sitambaram Pillay (8 மாணவர்கள்), SJK (T) Sungai Biong (7 மாணவர்கள்) ஆகிய தமிழ்ப் பள்ளிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றன.

சிலாங்கூர் மாநிலத்தில் SJK (T) Ladang Lima Belas (5 மாணவர்கள்) பகாங் மாநிலத்தில் SJK (T) Ladang Budu, (6 மாணவர்கள்) SJK (T) Ladang Boh Ringlet (6மாணவர்கள்) பள்ளிகளும் இடம் மாற்றம் செய்யப்படுகிறது.

அருண் துரைசாமி, குமரன் மாரிமுத்து, வெற்றி வேலன், சுப்பிரமணியம், ஜோன்சன் விக்டர், டாக்டர் சிவமணி, பாஸ்கரன் ஆகியோர் இன்று மனித அமைச்சர் சிவகுமார் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த முக்கிய சந்திப்பில் 140 தமிழ்ப்பள்ளிகளை இடமாற்றம் செய்யத் தவறினால், மீள முடியாத இயற்கை மரணத்தை அவைஎதிர்கொள்ளும் அபாயம் ஏற்படும் என்று அருண் துரைசாமி சுட்டிக் காட்டினார்.

“கடந்த 40 ஆண்டுகளில், கிராமப்புறங்கள் மற்றும் தோட்டங்களிலிருந்து நகர்ப்புறங் களுக்கு இந்தியர்கள் பெருமளவில் இடம் பெயர்ந்துள்ளனர், அங்கு கிட்டத்தட்ட 89% இந்திய மக்கள் இப்போது நகரங்களில் வாழ்கின்றனர்.

இதற்கிடையில், 67% தமிழ் பள்ளிகள் இன்னும் தோட்டங்களிலும் கிராமப்புறங்க ளிலும் அமைந்துள்ளன, இவற்றில் 62% பள்ளிகள் தோட்டத்திற்கு சொந்தமான நிலத்தில் அமர்ந்துள்ளன என்று அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here