பாகிஸ்தானில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு கோவில் கதவுகளை திறந்து விட்ட இந்து சமூகத்தினர்

பாகிஸ்தானில் பெய்து வரும் பருவகால மழை பாதிப்புகளால் அந்நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், சாலைகளும், பாலங்களும் முறையே துண்டிக்கப்பட்டும், நீரில் அடித்து செல்லப்பட்டும் உள்ளன. நாட்டில் 3.3 கோடி பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர். 5 லட்சத்திற்கும் கூடுதலானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

வெள்ளத்திற்கு பின்பு, லட்சக்கணக்கானோர் பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில், 1.34 லட்சம் பேர் வயிற்று போக்காலும், 44 ஆயிரம் பேர் மலேரியா வியாதியாலும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஐ.நா.வின் மக்கள் தொகை நிதியமைப்பு வெளியிட்ட செய்தியில், 6.5 லட்சம் கர்ப்பிணிகள் உள்ள அந்நாட்டில், 73 ஆயிரம் பேர் இந்த மாதத்தில் பிரசவிக்க கூடும் என தெரிவித்து இருந்தது. இதனால், தாய்மைகால சுகாதார சேவைகள் தேவைப்படுபவர்களாக அவர்கள் இருப்பார்கள் என்றும் தெரிவித்தது.

வெள்ளம் பாதித்தோரில், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தோல் வியாதியாலும், 101 பேர் பாம்பு கடியாலும் மற்றும் 500 பேர் நாய் கடியாலும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், பலூசிஸ்தானில் உள்ள கச்சி மாவட்டத்தில் ஜலால் கான் என்ற கிராமம் வெள்ள பெருக்கினால் மாகாணத்தில் இருந்து தனித்து விடப்பட்டது. இந்த சூழலில், மனிதநேயம் மற்றும் மதநல்லிணக்க அடிப்படையில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு, கோவில் கதவுகளை இந்து சமூகத்தினர் திறந்து விட்டுள்ளனர் என டான் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இதன்படி, வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் உள்ளூர்வாசிகள் பாபா மதுதாஸ் கோவிலை திறந்து விட்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here